பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். 

 பிர­த­மரின் விஜ­யத்தின் போது 55 கோடி  ரூபா பெறு­ம­தி­யான  அபி­வி­ருத்தித் திட்­டங்கள் அங்­கு­ரார்ப்­பணம் செய்து வைக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் சில திட்­டங்கள் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

ஏறா­வூரில் 120 மில்­லியன் ரூபா செலவில்  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நகர சபைக் கட்­டிடம் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க­வினால் இன்று திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

அத்­துடன் ஏறா­வூரில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் மர்ஹூம் அஷ்ரப் வாசி­க­சாலை மற்றும் 

ஏறா­வூரின் வாவிக்­கரை பூங்­காவை அண்­மித்த பகு­தியில் 100 மில்­லியன் ரூபா செலவில் அமை­யப்­பெ­ற­வுள்ள சுற்­றுலா தகவல் மையம் என்­பன திறந்து வைக்­கப்­படும் . அத்­துடன்  சுற்­றுலாத் தளத்­திற்­கான அடிக்­கலும்   நடப்­ப­ட­வுள்­ளது. மேலும், காத்­தான்­குடி நகர சபைக் கட்­டிட தொகு­தியும் திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ள­தோடு  ஆரை­யம்­ப­தியில் 100 மில்­லியன் ரூபா செலவில் அமை­யப்­பெ­ற­வுள்ள சுற்றுலாத் தகவல் மையம் மற்றும் வர்த்தகக் கட்டிட தொகுதிக்கான  அடிக்கல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நடப்படவுள்ளது.