இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடலின் முன்னோடியாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இன்று செவ்வாய்க்கிழமை (16) தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது.
நேயர்களின் அறிவு மற்றும் இரசனைக்காக அர்த்தபுடிமிக்க நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை முதன்மை பணியாகக்கருதி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது பொறுப்பினை ஈடேற்றி உள்ளது.
1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு றேடியோ ஆசியாவின் முதலாவது வானொலி நிலையம் ஆகும்.
பின்னர் 1949 ஆம் ஆண்டில் 'றேடியோ சிலோன்' எனும் பெயரில் தேசிய ஒலிபரப்பாக மாற்றப்பட்டது. இது ஒரு அரசாங்கத் திணைக்களமாக உருவாக்கப்பட்டது.
பின்னர், 1967 ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சட்டம் (1966 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்கம்) ஊடாக அரச கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது.
1972 ஆம் ஆண்டில் சிலோன் என்பது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. இதன் காரணமாக சிலோன் ஒலிபரப்புக் கூட்டத்தாபனம் என்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்றது.
அன்று முதல் அரச கூட்டுத்தாபனமாக இருந்து வரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தற்போது தகவல் மற்றும் ஊடக அமைச்சின் கீழ் உள்ளது. 7 தேசிய வானொலி நிலையங்கள், 6 பிராந்திய வானொலி நிலையங்கள் மற்றும் 4 சமூக வானொலி நிலையங்கள் மூலம் சேவைகளை வழங்கி வருகின்றது.
இந்த நிலையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இன்று (16) தனது நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது.
இந்நிகழ்வில், “சியக் நாமக்” என்ற தலைப்பில் இரவு முழுவதும் பக்தி சொற்பொழிவு மற்றும் விரிவான சங்க தக்ஷிணை ஆகியவை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெறவுள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவும், நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்த புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள், பொறியாளர்கள், நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM