நேற்றைய தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

16 Dec, 2025 | 10:51 AM
image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆறுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கணேமுல்ல - கடவத்த வீதியில் கொஸ்ஸின்ன பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கணேமுல்லவிலிருந்து கடவத்தை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டுவிலகி எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ராகமை - படுவத்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கணேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

இதேவேளை, வீரம்புகெதர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பிதுருவெல்ல சந்திக்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிதுருவெல்ல நோக்கிப் பயணித்த லொறி, வீதியில் பயணித்த சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மடவலதென்ன பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.வீரம்புகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், ஹொரணை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாணந்துறை - இரத்தினபுரி பிரதான வீதியின் முனகம பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறையிலிருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்த லொறி, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த அவரது இரண்டு மகள்கள் காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் 10 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், வாழைச்சேனை - கிரான் பகுதியில், ஏ-15 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனம், முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் இருந்தவர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்  கிரான் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், பின்னால் இருந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் சந்திவெளி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், சந்திவெளி ஜின்னா கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் சந்திவெளி பகுதியை சேர்ந்த 16 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் சந்திவெளி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குடாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனமல்வில - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தனமல்விலவிலிருந்து வெல்லவாய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது;

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கார் ஓட்டுநர், காரில் இருந்த ஒரு பெண் பயணி உள்ளிட்டோர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார், 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குடாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-07 05:59:03
news-image

போக்குவரத்து, கல்வி, சுகாதாரத் துறைகளில் உள்நாட்டு...

2026-09-07 05:36:31
news-image

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் வசதிகளை...

2026-09-07 05:25:44
news-image

ஜனநாயகத்தை பாதுகாக்க ஐ.தே.க.வும் ஐ.ம.ச.வும் இணைந்து...

2026-09-07 05:21:43
news-image

பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே பிரேமலால் ஜெயசேகர...

2026-09-07 05:19:23
news-image

மக்களின் பறிக்கப்பட்ட இறைமையை எதிர்கால அரசாங்கம்...

2026-09-07 05:16:29
news-image

அநுர அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும்...

2026-09-07 05:05:26
news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33