போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

16 Dec, 2025 | 10:27 AM
image

அளுத்கம - மத்துகம வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மோதி  உயிரிழந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. 

வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அளுத்கம - மத்துகம வீதியில் லபுவெல்கொட சந்தியில் நேற்று இரவு, போக்குவரத்து கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று குறித்த வீதியில் வேகமாக பயணித்த  மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். 

இதன்போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத மோட்டார் சைக்கிள்  போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் அருகிலுள்ள வடிகாலில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார். 

பலத்த காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் அளுத்கம தர்கா நகர வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி அளுத்கம வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

மேலும் இந்த விபத்து தொடர்பில் வெலிபென்ன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54
news-image

துணை மருத்துவப் பட்டதாரிகளுக்கு அரச நியமனம்...

2026-01-12 18:03:56
news-image

ஐக்கிய மக்கள் சக்தி மாதர் அணித்...

2026-01-12 17:20:54
news-image

இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல்...

2026-01-12 17:19:16