பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது!

Published By: Digital Desk 1

16 Dec, 2025 | 08:51 AM
image

மொரட்டுவை - மாதங்கஹவத்த பகுதியில் தொலைக்காட்சிப் பெட்டியை கொள்ளையடித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், கடந்த 11ஆம் திகதி வீடொன்றில் 4 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொரட்டுவ கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை மேலும் விசாரணைக்கு உட்படுத்தியதில், 08 வீடுகளில் புகுந்து சொத்துக்களை கொள்ளையடித்த குற்றங்களில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.

இதன்போது, குற்றம் செய்ய சந்தேகநபர் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள், மடிக்கணினிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் பிற சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று ஆண் சந்தேகநபர்களும் ஒரு பெண் சந்தேகநபரும் கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அங்குலான, எகொட-உயன, மதகிஸ்ஸ வீதி மற்றும் ராவதாவத்த பகுதிகளில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்சந்தேக நபர் அங்குலான பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் எனவும், ஆண் சந்தேகநபர்கள்; 37, 38 மற்றும் 54 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மொரட்டுவை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது...

2026-07-19 20:31:38
news-image

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை...

2026-07-19 20:19:28
news-image

அனுமதிப் பத்திரமின்றி 1000 பஸ்கள் சேவையில்...

2026-07-19 15:59:20
news-image

ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு...

2026-07-19 19:50:35
news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25