99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம் வருகிற எதிர்வரும் 21 ஆம் திகதி தோன்றுகிறது. மேலும் இச்சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று ஏற்படும்.

இந்த அரிய சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் ஏற்படும். இந்த தகவலை ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும்.

இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். இந்நிலையில் முழு சூரிய கிரகணம் வருகிற நாளை மறுநாள் தோன்றுகிறது.

ஆனால் இதை பொது மக்கள் வெறுங்கண்ணால் பார்க்க கூடாது. அதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும். 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கிரகண கண்ணாடி அணிந்து பார்ப்பதும் பாதுகாப்பற்றது. இது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் இச்சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதேவேளை, சூரிய கிரகணத்தைப் படம்பிடித்து நேரலையில் காண்பிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில், கமராக்கள் பொருத்தப்பட்ட 50 பலூன்களை பறக்க விட அமெரிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

முதல் முறையாக இந்தக் காட்சி இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பாக இருக்கிறது.

அமெரிக்காவில் முழுமையாக காணக்கூடிய வகையில் ஏற்படும் இந்த சூரிய கிரகணம், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அரைவாசியாக தென்படும்.

1955 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்திற்கு பின்னர் ஏற்படும் முழுமையான கிரகணம் இதுவாகும். இந்த சூரிய கிரகணம் காரணமாக அமெரிக்காவில் முழுப் பகலும் இரவாக காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அடுத்த முழுமையான சூரிய கிரகணம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி ஏற்படவுள்ளது. இந்த சூரிய கிரகணம் தென் அமெரிக்க பகுதியில் தென்படவிருப்பது முக்கிய அம்சமாகும்.

இதனிடையே எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏற்படும் வலய சூரிய கிரகணத்தை இலங்கையில் தெளிவாக காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.