(நெவில் அன்தனி)
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு காலத்தில் இலங்கை எவ்வாறு உயரிய இடத்தில் இருந்ததோ அந்த இடத்தை மீண்டும் அடைய வேண்டும் ஒரே நோக்கத்திற்காகவே உயர் ஆற்றல் வெளிப்பாட்டு நிலையத்தில் உள்ளக பயிற்சியகத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நிர்மாணித்துள்ளது. இதனை இளம் கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தி எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் விளையாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல உறுதிபூண வேண்டும். அத்துடன் தேசப்பற்றை முன்னிலைப் படுத்தி போட்டிகளில் பங்குபற்றவேண்டும்என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.




கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் உயர் ஆற்றல் வெளிப்பாட்டு நிலையத்தில் ஒரு பகுதியாக 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக பயிற்சியகத்தை திங்கட்கிழமை (15) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்த பின்னர் உரையாற்றியபோதே அமைச்சர இதனைத் தெரிவித்தார்.
சுழல்பந்துவீச்சுக்கு பொருத்தமான இரண்டு ஆடுகளங்கள், வேகப்பந்துவீச்சுக்கு பொருத்தமான இரண்டு ஆடுகளங்கள், பொதுவான நான்கு ஆடுகளங்கள் இந்த உள்ளக பயிற்சியகத்தில் அமைகக்பட்டுள்ளன. அத்துடன் வேகப்பந்துவீச்சு இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஒலிம்பியன் சுகத் திலக்கரட்ன, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கிரிக்கெட் அணித் தலைவர்கள், வீரர்கள், வீராங்கனைகள் இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய அமைச்சர்,
'ஒரு காலத்தில் கிரிக்கெட் விரர்கள் தங்களது உடல்பலத்தைக் கொண்டு விளையாடினர். சனத் ஜயசூரிய போன்றவர்கள் அவ்வாறு விளையாடிதான் உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு வென்றுகொடுத்தனர். இப்போது கிரிக்கெட் வீரர்கள் உயரிய நிலையை அடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு சகலவிதமான தொழில்நுட்ப வசதிகளையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உலக நாடுகளும் தொழில்நுட்பங்ளைப் பயன்படுத்திவருதால் அதன் அவசியம் எமக்கும் இன்று தேவைப்படுகிறது. எனவே எமது எதிர்கால கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கு, வெற்றிகளுக்கு மற்றும் எமது வீரர்களின் அதிசிறந்த ஆற்றல்கள் அதிகரிப்பதற்கு இந்த நிலையம் பெரிதும் உதவும் என நான் நம்புகிறேன்.



'அது மட்டுமல்ல கிரிக்கெட் விளையாட்டில் முதலீடுகளை செய்வது அவசியமாகும். அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் நாங்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஒன்றை நிர்மானிப்பதற்கு வேலைகளை ஆரம்பித்துள்ளோம். தியகமவில் சர்வதேச விளையாட்டரங்கு ஒன்றை நிர்மானிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறோம். இலங்கைக்கு வீரர்கள் வெற்றிகளை ஈட்டிக்கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே இவை அனைத்தும் செய்துகொடுக்கப்படுகிறது. எவ்வாறாயினும் நாங்கள் என்னதான் செய்தாலும், என்னவகையான நிலையங்களை நிர்மாணித்தாலும் எமது எண்ணிக்கை பலகையில் குவியும் ஓட்டங்களும் நாங்கள் வீழ்த்தும் விக்கெட்களும் தான் முக்கியமாகும். நாங்கள் 80 ஓட்டங்கள் பெற்றால் எதிரணியை 75 ஓட்டங்களுக்குள் சுருட்டவேண்டும். அதுதான் கிரிக்கெட் விளையாட்டு.
'சில காலமாக எமது கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்துகொண்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் இது சகஜம். இதன் காரணமாக வீரர்களின் நம்பிக்கையில் உயர்வு, தாழ்வு ஏற்படுகிறது. எனவே நம்பிக்கையை நிலையாக பேணவெண்டும். எம்மிடம் திறமைசாளிகள் இருக்கின்றனர், வளங்கள் இருக்கின்றன. எனவே இந்த பயிற்சி நிலையத்தில் வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டு இலங்கைக்கு வெற்றியீட்டிக்கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். எதிர்கால வீரர்கள் இங்கு வருகை தந்துள்ளனர். நாட்டுக்காக விளையாடுகிறோம் என்ற உணர்வுடன் அனைவரும் விளையாட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அண்மையில் பாகிஸ்தானில் எமக்கு ஒரு பிரச்சினை எழுந்தது. அந்த மாதிரியான சூழ் நிலையில் நாங்கள் நாட்டைப் பற்றி சிந்திக்கவெண்டும். ஏனேன்றால் எமக்கு நாடுதான் முக்கியம். தேசப்பற்று முக்கியம். அத்தகை சந்தர்ப்பங்களில் நாட்டின் பெருமையை, கௌரவத்தை பெணுவது வீரர்களின் கடப்பாடாகும்.
'அடுத்துவரும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர், இங்கிலாந்துக்கு எதிரான தொடர், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் வெற்றிபெற்று, எமது இரசிகர்களை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திருப்திபடுத்துவார்கள் என எதிர்பார்கிறேன்' என்றார்.
எஸ்எல்சி தலைவர் ஷம்மி சில்வாவினால் 2019இல் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்
இந்த வைபவத்தில் ஆரம்ப உரை நிகழ்த்திய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ பொருளாளர் சுஜீவ கொடலியத்த,
'சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா பேணும் நெருங்கிய, சுமுகமான உறவுகளும் அவரிடம் உள்ள அனுபவங்களும், தூரநோக்கு சிந்தைகளுமே உயரிய ஆற்றல் வெளிப்பாடு நிலையம் முழுமை பெறுவதற்கு காரணமாகும். 2019ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பெற்றதிலிருந்து இதற்கான திட்டங்களை ஷம்மி சில்வா ஆரம்பித்தார். அப்போது மிகவும் குறைவான அடிப்படை வசிதிகளே இருந்தது. ஆனால், ஆறு வருடங்களில் அவரது திட்டம் சகல வசதிகளையும் கொண்ட பரிபூரண திட்டமாக உருவெடுத்துள்ளதை இன்று நாம் நேரில் காண்கிறோம்.




'இலங்கையில் சர்வதேச தரத்திலான 8 விளையாட்டரங்குளை நிர்மாணிப்பதற்கான திட்டம் ஷம்மி சில்வா தலைமையில் 2019ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பலனாக தம்புள்ளை கிரிக்கெட் விளையாட்டரங்கு பூரணமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் எல்ஈடி பேரொளி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பல்லேகலை, காலி, ஹம்பாந்தோட்டை மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த எஸ்எஸ்சி மைதானத்தில் பேரொளி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆர். பிரேமதாச அரங்கில் பயன்படுத்தப்பட்ட பழைய பேரொளி விளக்குகள் சிசிசி மைதானத்தில் பொருத்தப்பட்டு அந்த மைதானம் இப்போது சர்வதேச பயிற்சி மைதானமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலங்கையினால் தனித்து நடத்த முடியும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
'சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கும் நிதியத்திலிருந்து 20 வீதத்தை ஒதுக்கி உள்ளூர் கிரிக்கெட் மேம்பாட்டிற்காக பயன்படுத்திவருகிறோம். இதற்காக வருடா வருடம் 624 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தோம். அடுத்த வருடம் இந்தத் தொகையை 1.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளோம்' என்றார்.
உயர் ஆற்றல் வெளிப்பாட்டு நிலையம் தொடர்பான நூல் ஒன்றின் பிரதிமைய விளையாட்டடுத்துறை அமைச்சர் சுனில் குமார கமவேவிடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா கையளித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM