அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியிருக்கிறார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்'.

அட்லி இயக்கத்தில் மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்து வரும் இப்பத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்ரகுமான் இசையில் படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். இதில் சமந்தா தனது காட்சிகளை முடித்துவிட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 

இதுகுறித்த சமந்தா டுவிட்டரில் கூறியிருப்பதாவது, 

'மெர்சல் படத்தில் தனது பாகம் முடிந்தது. 'கத்தி', 'தெறி', 'மெர்சல்' என விஜய் உடன் மூன்று அருமையான படங்களில் நடித்துவிட்டேன். அவருடன் பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. விஜய் சிறந்த நண்பர், மரியாதைக்குரியவர்"

இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். 

'மெர்சல்' படத்தில் இருந்து 'ஆளப்போறான் தமிழன்", 'நீ தானே" என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. 

மேலும் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.