இந்திய மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தொடங்கி வைத்த 'வேல்ஸ் வர்த்தக மையம்'

15 Dec, 2025 | 03:25 PM
image

சென்னையின் புறநகர் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச அளவிலான வேல்ஸ் வர்த்தக மையத்தை இந்திய மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் மற்றும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி திறந்து வைத்தனர்.

வேல்ஸ் கல்வி குழுமங்கள் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவரான டொக்டர் ஐசரி கே. கணேஷின் புதிய இலக்கான 'வேல்ஸ் வர்த்தக மையம்' சென்னையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த வர்த்தக மையத்தில் சர்வதேச அளவிலான கண்காட்சிகள்- தொழில் மற்றும் வணிக மாநாடுகள் - கொர்ப்பரேட் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வுகள் - அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் - விருது வழங்கும் விழாக்கள் - ஆடம்பர திருமணங்கள் - உச்சி மாநாடுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை விரிவாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தும் வகையில் நவீன வடிவமைப்பு மற்றும் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஒரே தருணத்தில் இருபதாயிரம் பேர் பங்குபற்ற கூடிய வசதிகளும், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் வசதியுடனும் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த வளாகத்தில் வேல்ஸ் திரைப்பட நகரம் மற்றும் முன்னணி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புகளுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் ஆறு திரைகளுடன் கூடிய திரையரங்க வளாகங்கள் - உணவகங்கள் - பொழுதுபோக்கு அம்சங்கள் - என பல விடயங்களும் இதில் இடம் பிடித்திருக்கிறது.

தமிழகத்தின் கலாச்சார மையமாக உருவாகியுள்ள இந்த வேல்ஸ் வர்த்தக மையத்தின் தொடக்க விழாவில் இந்திய மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், தமிழக நிதித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு,  வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவரான டொக்டர் ஐசரி கே. கணேஷ், டொக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டொக்டர் ஏ. சி. சண்முகம் ஆகியோர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் கமல்ஹாசன் பேசுகையில், '' சென்னை பான் இந்திய அளவிலான திரைப்படத்தின் தயாரிப்பு மையமாக உருவெடுத்துள்ளது. தமிழ் திரையுலகத்தை அடுத்த நிலைக்கு உயர்த்த இளைய தலைமுறையினர் முன் வர வேண்டும் '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்