மலேசியாவை வெற்றி கொண்டதன் மூலம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரை இறுதி வாய்ப்பு உயிர் பெற்றுள்ளது

Published By: Digital Desk 3

15 Dec, 2025 | 01:29 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஏ குழுவில் இடம்பெறும் வரவேற்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரை இறுதி வாய்ப்பு  உயிர்  பெற்றுள்ளது.

மலேசியாவுக்கு எதிராக துபாய் தி செவன்ஸ் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற போட்டியில் அயான் மிஸ்பா குவித்த அபார சதத்தின் உதவியுடன் ஐக்கிய அரபு இராச்சியம் 78 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் வெற்றிபெற்றால் அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். பாகிஸ்தான் வெற்றபெற்றால் அவ்வணி அரை இறுதிக்குள் நுழையும்.

சீரற்ற காலநிலையால் ஆரம்பம் தாமதித்ததால் அணிக்கு 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஐக்கிய அரபு இராச்சிய அணி 47 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களைக் குவித்தது.

அயான் மிஸ்பா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 9 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 163 ஓட்டங்களைக் குவித்தார்.

இதனிடையே அணித் தலைவர் யாயின் கிரான் ராயுடன் ஆரம்ப விக்கெட்டில் 87 ஓட்டங்களையும் முஹம்மத் ரயானுடன் 2ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களையும் ப்ரித்வி மதுவுடன் 4ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களையும் அயான் மிஸ்பா பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

யாயின் கிரான் ராய் 44 ஓட்டங்களையும் முஹம்மத் ரயான் 48 ஓட்டங்களையும் ப்ரித்வி மது 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் முஹம்மத் அக்ரம் 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜாஷ்வின் கிரிஷ்ணமூர்த்தி 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  19 வயதுக்குட்பட்ட  மலேசியா ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 47 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இதில் முஹம்மத் ஆலிப் 54 ஓட்டங்களையும் மொஹம்மத் ஹைரில் 49 ஓட்டங்களையும் அணித் தலைவர் டியாஸ் பட்ரோ, ஹம்ஸா பங்கி ஆகிய இருவரும் தலா 25 ஓட்டங்களையும் முஹம்மத் அக்ரம் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்தவீச்சில் முஹம்மத் பாஸில் ஆசிம் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலி அஸ்கர் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58
news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம்...

2026-09-04 20:46:15
news-image

றினோன் - புளூ ஈக்ள்ஸ் அணிகள்...

2026-09-04 13:44:57
news-image

AFC 20இன் கீழ் ஆசிய கிண்ண...

2026-09-04 12:12:27
news-image

இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச்...

2026-09-03 14:15:10
news-image

ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணம் 2027க்கான...

2026-09-02 22:49:03