யுவதி (17) ஒருத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.  

பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளம வில்பத்த எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்தே இவ்வாறு இவ்யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அவளது உடல் அவ்வீட்டிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி தனது வீட்டிலிருந்து வெளியேறி சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியேறி பள்ளம வில்பத்த பிரதேச வீட்டில் தனது கணவர் எனக் கூறப்படும் இளைஞருடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எதற்காக இவ்யுவதி தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை எனத் தெரிவிக்கும் பள்ளம பொலிஸார் சம்வபம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.