நிதி மேசடி விசாரணைப் பிரிவு, உப பொலிஸ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய குற்றத்திற்காக பாராளுமன்ற அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இருப்பதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தெரிவித்தார்.

அதிகாரியை அவமதித்த குற்றத்திற்காக நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு நோடீஸ் விடுக்க கோரி நிதி மோசடி விசாரணைப்பிரிவு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

மேலும் சாட்சியாளர்கள் மற்றும் குற்றவாளிகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நாமல் பாரிய குற்றத்தை செய்துள்ளதாக நீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் சந்தன கலன்சூரிய அதிகாரியை அவமதித்த குற்றத்திற்காக நாமலை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இருக்கின்றது என பொலிஸ் பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய கிரீஸ் நிறுவனத்திடம் 70 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டமை தொடர்பாக நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக விசாரணை நடாத்திய அதிகாரியையே நாமல் ராஜபக்ஷ அச்சுறுத்தியுள்ளார்.

இந் நிலையில் பொலிஸார் நாமலை எந்நேரத்திலும் கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.