மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதி போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பு!

15 Dec, 2025 | 11:57 AM
image

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதி போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இன்று திங்கட்கிழமை(15) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகளில் முடிவடைந்த பின்னர் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சுமார் 18 நாட்களுக்கு பின்னர் நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதி இவ்வாறு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

எனினும் வீதிக்கு மேல் பல்வேறு இடங்களில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், அதற்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் வரை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பாக வீதி அமைக்கப்பட்டு பல நிபந்தனைகளுடன் முற்றாக பொதுமக்களின் பாவனைக்காக திங்கட்கிழமை (15) திறந்து விடப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் குறித்த வீதியினால் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் நிறுத்துதல் வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடைபயணம் மற்றும் பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு சில விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை இவ்விதிமுறைகளை மீறுதல் சட்டவிரோதம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீதியைத் திருத்தும் பணிகள், இராணுவத்தின் 6 ஆவது பொறியியல் படைப்பிரிவு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நாவலப்பிட்டி மற்றும் எத்கல பொலிஸ் நிலையங்கள், பஸ்பாகே கோரல பிரதேச சபை உள்ளிட்ட பல தரப்பினரின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை உலப்பனை – கண்டி வீதியின் புனரமைப்புப் பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில்...

2026-01-13 17:43:05
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு...

2026-01-13 17:36:02
news-image

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை வினைத்திறன்...

2026-01-13 17:22:20
news-image

புகையிரத திணைக்களத்தின் பழைய இரும்புகளை அகற்றல்...

2026-01-13 17:17:22
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்...

2026-01-13 16:21:59
news-image

"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது...

2026-01-13 17:14:50
news-image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக...

2026-01-13 16:38:59
news-image

அநுராதபுரத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல்...

2026-01-13 16:05:11
news-image

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்...

2026-01-13 16:28:30
news-image

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்...

2026-01-13 16:28:13
news-image

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

2026-01-13 16:07:42
news-image

அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள்...

2026-01-13 16:04:39