21 கிலோ 'குஷ்' கஞ்சாவுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

15 Dec, 2025 | 11:10 AM
image

வத்தளையில் 34 வயதுடைய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் (PNB) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தாய்லாந்தின் பாங்கொக்கில் இந்த போதைப்பொருட்களை கொள்வனவு செய்து, வேறொரு நபர் மூலம் நாட்டிற்கு கொண்டு வந்து தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு போதைப்பொருட்களை கொண்டு வர பல்வேறு நபர்களைப் பயன்படுத்தியதாகவும், பின்னர் நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது.

பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார்  21 கோடியே 66 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த போதைப்பொருள் கையிருப்பு அடங்கிய பயணப்பை கடந்த 13 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடத்தல்காரரின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல்காரர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) பாங்கொக்கில் இருந்து  பயணப்பை ஒன்றுடன் நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

தொடர்ச்சியான கண்காணிப்பைத் தொடர்ந்து, சந்தேகநபர் வீடு திரும்பிய பின்னர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்து, 20 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோகிராம் 668 கிராம் 'குஷ்' கஞ்சாவை கைப்பற்றியதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இவை தவிர சந்தேகநபரிடமிருந்து 15 இலட்சத்து 19 ஆயிரம் ரூபா பெறுமதியான 4,900 அமெரிக்க டொலர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரும், அவர் வைத்திருந்த போதைப்பொருள் மற்றும் பணமும் இன்று திங்கட்கிழமை (15)  வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51