நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுராதபுரம் - புத்தளம் வீதியில் பந்துலகம இராணுவ முகாமிற்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நொச்சியாகமவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் - பொதானேகம பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன். அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய காலி வீதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரத்மலானையிலிருந்து சென்ற முச்சக்கரவண்டி பாணந்துறையிலிருந்து மொரட்டுவ நோக்கிச் சென்ற லொரியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, அதில் பயணித்த நபர் மற்றும் லொறியின் சாரதி ஆகியோர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மடபாத, படகெத்தர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM