இன்றைய திகதியில் திருமணத்திற்கு பிறகு குழந்தையின்மை பிரச்சினையை சந்திக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதில் மகப்பேற்றின்மைக்கு ஆண்களும் காரணமாகிறார்கள். இதற்கு அவர்களின் புகைபிடிக்கும் பழக்கமே முக்கிய காரணியாகிறது. இது குறித்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு இருபது சிகரெட்டிற்கு மேல் புகைக்கும் பழக்கமுடையவர்கள் அவர்களின் விந்தணு எண்ணிக்கையிலும், விந்தணுவின் வீரியத்திலும் குறைபாடு ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக எனப்படும் விறைப்புத் தன்மை குறைபாடு (erectile dysfunction) அதிகளவில் ஆண்களுக்கு ஏற்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் புகைபிடிப்பவர்கள் உயிரணு குறைபாட்டுடனும் விரைவில் சர்க்கரைநோய், உயர் குருதி அழுத்த நோய், அதிகளவிலான கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்பிற்கும் ஆளாகிறார்கள். இத்துடன் இவர்களுக்கு மன அழுத்தமும் சேர்ந்துவிடுமாம்.
தற்போது இதற்கான சிகிச்சையாக சில ஆலோசனைகளை மருத்துவத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
தினமும் 30 நிமிடங்கள் விரைவு நடைபயிற்சியை தவறாது மேற்கொள்ளவேண்டும். சரியான நேரத்திற்கு சரியான சத்தான உணவை சாப்பிடவேண்டும். பாலியல் தொடர்பான விழிப்புணர்வை பெறவேண்டும். அதாவது தாம்பத்தியத்தின் போது, மூளை, ஹோர்மோன்கள், உணர்வுகள், நரம்புகள், தசைகள் மற்றும் இரத்த குழாய்கள் ஆகியவை ஒரே தருணத்தில் செயல்படுவதால் எக்காரணம் கொண்டும் இவற்றில் தடையையேற்படுத்தும் சிகரெட்டை முற்றாக தவிர்க்கவேண்டும். உடலை சரியான எடையில் வைத்துக் கொள்வதுடன் அதனை அதே எடையில் இருக்குமாறு பராமரிக்கவேண்டும்.
இதை தவிர்த்து வேறு காரணங்களால் விறைப்பு தன்மையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது குறித்து உரிய மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும்.
வைத்தியர். அகர்வால்.
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM