இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

Published By: Vishnu

15 Dec, 2025 | 12:42 AM
image

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாய்  பெறுமதியான 150 கிலோ கஞ்சா பொதிகளுடன், மரைன் பொலிசார்  இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சமீப காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு,கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, சமையல் மஞ்சள், மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை (13)  இரவு தொண்டி அடுத்த முள்ளிமுனை கடற்கரையிலிருந்து  படகில்  இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை (13) இரவு முள்ளிமுனை முக துவார கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மரைன் பொலிசாரை கண்டதும் அங்கிருந்து இருவர் தப்பி சென்ற நிலையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து மரைன் பொலிசார் தீவிரமாக தேடினர்.

அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக  மூட்டையில் பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை தேவிபட்டினம் மரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து எடை போட்டுப் பார்த்தபோது அதில் 150 கிலோ கஞ்சா இருந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த மரைன் பொலிசார் கடத்தலில் ஈடுபட்ட முள்ளிமுனை பகுதியை சேர்ந்த   இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் இந்திய மதிப்பு  ரூ.25 லட்சம் எனவும் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என மரைன் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலவசக் கல்வியைப் பாதுகாக்க முன்னின்று போராடுவதால்...

2026-01-12 19:35:28
news-image

கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது...

2026-01-12 17:08:47
news-image

பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16...

2026-01-12 19:22:24
news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54