அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த அமெரிக்க மற்றும் இந்திய விமானங்கள் நாட்டை விட்டு புறப்பட்டன

Published By: Vishnu

14 Dec, 2025 | 10:04 PM
image

நாட்டில்  சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பன ஏற்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் மீட்பு சேவைகளுக்காக அமெரிக்காவின் C130 விமானங்கள் இரண்டும் 60 பேர் கொண்ட குழுவினரும் 2025.12.07 முதல் 2025.12.13 வரை நாட்டில் பணியாற்றினர். இவர்கள் கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை விமானப்படை தளங்களில் இருந்து யாழ்ப்பாணம், மத்தள, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

ஞாயிற்றுக்கிழமை (2025 டிசம்பர் 14) அவர்களின் பணியை நிறைவு செய்து ஓர் விமானமும் அதன் பணியாளர்களும்  நாட்டை விட்டு புறப்பட்டனர். 

அதேபோன்று எமது அண்டை நாடான இந்தியாவின் இரண்டு ஹெலிக்கொப்டர்கள் அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக வேண்டியும் அவர்களுக்கான நிவாரணங்களை கொண்டு செல்வதற்காக வேண்டியும் இலங்கை வந்து பணியாற்றி  மீண்டும் நாட்டை விட்டு புறப்பட்டது.

அதன் பின்பு இன்னுமொரு இந்திய எம்.ஐ 17 ஹெலிகாப்டர் கடந்த 2025 டிசம்பர் 08ம் திகதி நாட்டிற்கு வந்து மீட்பு பணிகள் மற்றும் அனர்த்த சேவை பணிகளில் ஈடுபட்டது. அந்த ஹெலிகாப்டரும் ஞாயிற்றுக்கிழமை (14) 2025 டிசம்பர் 14 பணிகளை நிறைவு செய்து நாட்டை விட்டு புறப்பட்டது. 

நாடு  அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமக்காக உதவி கரம் நீட்டிய இந்திய மற்றும் அமெரிக்க விமானங்கள் மற்றும்  மற்றும் பணியாளர்களை வழி அனுப்பி வைப்பதற்காக  இலங்கை விமானப்படையின் தளபதி  எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர மற்றும் சிரேஸ்ட விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர்  வருகை தந்து இருந்தனர். அமெரிக்க மற்றும் இந்திய பணியாளர்களுக்கு தங்களுடைய நன்றிகளையும் தெரிவித்து அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.

இந்திய விமானப்படையினர்....

அமெரிக்க விமானப்படையினர்....

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலவசக் கல்வியைப் பாதுகாக்க முன்னின்று போராடுவதால்...

2026-01-12 19:35:28
news-image

கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது...

2026-01-12 17:08:47
news-image

பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16...

2026-01-12 19:22:24
news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54