(இராஜதுரை ஹஷான்)
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணங்களுக்கான வழிகாட்டல்களை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வுநிலை) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2025.11.21 ஆம் திகதி முதல் தாக்கம் செலுத்திய திட்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை அடிப்படையாகக் கொண்டு 2025.11.28 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவுறுத்தல் ஊடாக முழு இலங்கைக்கும் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டதுடன், அன்றைய தினம் அனர்த்த நிவாரண சேவை சுற்றறிக்கையின் 03/2025 ஊடாக 2025.11.21 ஆம் திகதி முதல் மறுஅறிவித்தல் விடுக்கும் வரையில் இலங்கை முழுவதும் அனர்த்த நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணைமளித்தல், உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கல்,முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்த வீடுகளுக்கு நட்டஈடு வழங்கல்,பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கல் உட்பட பல நிவாரணங்கள் 2025.12.05 ஆம் திகதி வெளியிடப்பட்ட செலவு சுற்றறிக்கை 08./2025 ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டிலுக்காக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு மற்றும் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
நிவாரணம் வழங்கலுக்காக சம்பந்தப்படும் நிறுவனங்களின் பொறுப்புக்கள்.
இந்த சுற்றறிக்கை ஊடாக நிச்சயிக்கப்படும் கொடுப்பனவு மற்றும் நிவாரணத்துக்கமைய அனர்த்த சேவை வழிகாட்டல், 01/2025,2,1 பிரகாரம் கிராமிய அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண சேவை குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு காணப்படும் மாதிரிகளுக்கு மேலதிகமாக நிர்வாக கிராம சேவகர்,
சமூக சேவை உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்,சிறுவர் காப்புறுதி உத்தியோகத்தர்,வயது முதிர்ந்தோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்,சிறு வர்த்தக அபிவிருத்தி உத்தியோகத்தர், பௌத்த விவகார உத்தியோகத்தர்,சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், வீடமைப்பு உத்தியோகத்தர், ஏனைய துறை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது.
வழங்கப்படும் கொடுப்பனவு மற்றும் நிவாரணம்
அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்கள் தமது வீடுகளுக்கு சென்று துப்பரவு பணிகளை மேற்கொள்வதற்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும். சொந்த வீடு மற்றும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
இந்த கொடுப்பனவை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதி
2025.11.21 ஆம் திகதி முதல் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் முழுமையாக சேதமடைந்த வீடு, வெள்ளம், சூறாவளி, மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பகுதியளவிலான பாதிப்பு, வீட்டுக்கு சேதம் ஏற்படாத பட்சத்தில் வெள்ளம், சூறாவளி, மண்சரிவு ஆகிய தாக்கங்களில் அசுத்தமடைந்த வீட்டை துப்பரவு செய்வதற்காக இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
காணியின் உரிமை
காணியின் உரிமை மற்றும் வருமானம் ஆகிய காரணிகளை கருத்திற் கொள்ளாமல் இந்த கொடுப்பனவை வழங்க வேண்டும்.சொந்த வீடு,வாடகை வீடு, சட்டவிரோத குடியிறுப்பாளர்கள், அரச உத்தியோகபூர்வ வீடுகளில் வசிப்போருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் கொப்பிகள்,எழுதுவினை பொருட்கள் மற்றும் சீறுடைகளை கொள்வனவு செய்வதற்கு ஒருதடவை மாத்திரம் ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.
பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது கிராம சேவகரால் உறுதிப்படுத்தப்பட்ட வகையில் பரிந்துரை செய்யப்படும் மாதிரி 2.7 விண்ணப்பத்துக்கு அமைய தயாரிக்கப்பட்டு 2.7.1 (பிரிவு) மாதிரி ஊடாக பிரதேச செயலாளர் அலுவலகம் ஊடாக மாவட்ட செயலாளர் காரியாலயத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த கொடுப்பனவை வழங்க தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களின் பெயர் பட்டியல் தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
வாடகை வீட்டில் வசிக்க ஆறு மாத காலத்துக்கு 25 ஆயிரம் ரூபா
மண்சரிவு அல்லது வெள்ளப்பெருக்கு பாதிப்பால் வசிப்பதற்கு வீடில்லாதவர்கள் புதிய வீட்டை நிர்மாணித்துக் கொள்ளும்வரை பிறிதொரு இடத்தில் குடியிறுப்பதற்கு 25 ஆயிரம் ரூபா ஆறு மாத காலத்துக்கு வழங்கப்படும்.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வசிப்பதற்கு பாதுகாப்பற்ற பகுதி என்று அறிவுறுத்தப்பட்ட பகுதியில் வசித்தோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும். வாடகை வீட்டில் வசித்தோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படாது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM