நாட்டிலிருந்து புறப்பட்டது ஐக்கிய அரபு இராச்சிய குழு 

Published By: Digital Desk 3

14 Dec, 2025 | 05:13 PM
image

நாட்டில் டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வருகை தந்த ஐக்கிய அரபு இராச்சிய குழு, தனது மனிதாபிமான பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

இந்த அவசர நிவாரண நடவடிக்கை, ஐக்கிய அரபு இராச்சிய  ஜனாதிபதி ஷேக் முகமது பின் சாயித் அல் நஹ்யானின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. 

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ஐக்கிய அரபு இராச்சிய நிவாரண குழு, மொத்தமாக 116 மெட்ரிக் தொன் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கியது. இதில் உணவுப் பொருட்கள், தற்காலிக தங்குமிடங்களுக்கு தேவையான கூடாரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும். இவை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சிய  தேடுதல் மற்றும் மீட்பு குழு  உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு, விசேட கள நடவடிக்கைகள் மூலம் காணாமல் போன 20 பேரின் உடல்களை மீட்டெடுத்தது. அதேபோல், சிறிய காயங்களுக்குள்ளான 8 பேருக்கு வைத்திய சிகிச்சையும் வழங்கப்பட்டது.

ஐக்கிய அரபு இராச்சிய நிவாரண குழுத் தலைவர், இலங்கைக்கும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்க ஐக்கிய அரபு இராச்சிய   உறுதியாக உள்ளது என தெரிவித்தார். 

மனிதாபிமான சேவை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அடிப்படை கொள்கையாகும் எனவும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் முழுமையாக மீண்டு வரும்வரை அவர்களுடன் தோளோடு தோள் நின்று செயல்படுவதே அந்த நாட்டின் நிலையான அர்ப்பணிப்பாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லக்கல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு...

2026-07-12 08:39:11
news-image

வத்தளையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர்...

2026-07-12 08:33:59
news-image

வெப்பச் சுட்டெண் உயர்வு: 6 மாவட்டங்களுக்கு...

2026-07-12 07:03:38
news-image

மத்துகமவில் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச்...

2026-07-12 05:14:05
news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57