நுவரெலியா, கிரகரி ஆற்றில் மூழ்கிய இருவரை கடற்படை வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.

நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகள் கிரகரி ஆற்றில் ஜெட் ஸ்கை வோட்டர் கோட்டில் வலம் வந்து கொண்டிருந்த போது தற்செயலாக இருவர் ஆற்றில் விழுந்துள்ளனர்.

ஆற்றில் விழுந்த இருவரையும் இலங்கை கடற்படையினர் ரெபிட் ஆக்ஷன் படகின் உதவியுடன் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த சுற்றுலாப்பயணிகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை பிறப்பிடமாக கொண்டவர்கள்,  தற்போது இவர்கள் லண்டனில் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.