மெஸ்ஸியை பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரகளை செய்த ரசிகர்கள்

13 Dec, 2025 | 04:30 PM
image

(நெவில் அன்தனி)

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரும் ஆர்ஜன்டீனாவை FIFA 2022 கால்பந்தாட்ட உலக சம்பியனாக்கிய அணித் தலைவருமான லியோனல் மெஸ்ஸியை அருகில் பார்க்க முடியாததால் ஆத்திரம் அடைந்த இந்திய ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

லியோனல் மெஸ்ஸி 14 வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். அவரது மூன்று நாள் விஜயத்தில் ஒரு பகுதியாக இன்று சனிக்கிழமை (13) காலை கொல்கத்தா நகருக்கு சென்றிருந்தார்.

அங்கு அவருக்கு இந்திய கால்பந்தாட்ட ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

கொல்கத்தா லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டுக் கழகம் சார்பில் உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தியவாறு மெஸ்ஸியின் 70 அடி உயர உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை காணொளி மூலம் திறந்துவைத்த மெஸ்ஸி, அங்கிருந்து சோல்ட் லேக் விளையாட்டரங்கிற்கு சென்றார்.

அங்கு மெஸ்ஸிக்கு 78,000 ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்பளித்தனர்.

எனினும் அவரைச் சுற்றி அதிகாரிகள் இருந்ததால் ரசிகர்களால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை. மேலும் அவர் அரங்கை சுற்றி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் அவரை அருகில் பார்த்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால், மெஸ்ஸி இடைநடுவில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பி விட்டதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பனர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட...

2026-09-12 03:07:12
news-image

ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட்டில்  பங்குபற்றவுள்ள...

2026-09-12 01:48:15
news-image

நியூ யங்ஸை வெற்றிகொண்டு சுப்பர் லீக்கில்...

2026-09-11 21:08:42
news-image

இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்திப்பது இலங்கையா?...

2026-09-11 19:03:22
news-image

பங்களாதேஷை வீழ்த்தி மகளிர் ரி20 ஆசிய...

2026-09-11 15:57:35
news-image

நாவலப்பிட்டியில் மாணவர்களுக்கு இலவச கால்பந்து பயிற்சி!

2026-09-11 14:22:48
news-image

சுப்பர் லீக் முதல் சுற்றை ஆறுதல்...

2026-09-10 20:41:01
news-image

இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இரண்டு பயிற்சிப்...

2026-09-10 19:35:15
news-image

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்...

2026-09-10 17:35:42
news-image

ஹர்மன்பிரீத் கவுர் தலைகீழாக பாய்ந்து பிடித்த...

2026-09-10 17:05:27
news-image

20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும்...

2026-09-10 16:31:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும்...

2026-09-10 13:58:38