தடைகளை உடைத்தெறியும் சூட்சம வழிபாடு..!?

13 Dec, 2025 | 04:18 PM
image

இன்றைய சூழலில் ஒவ்வொரு நாளும் காலையில் கண்விழித்த தருணம் முதல் இரவு படுக்கையில் கண் உறங்கும் தருணம் வரை எம்முடைய எண்ணங்களை செயல்படுத்தும் போது விவரிக்க இயலாத அல்லது பகிர்ந்து கொள்ள இயலாத அல்லது காரணங்களை கண்டறிய இயலாத வகையிலான தடைகள் நேரடியாகவும்... மறைமுகமாகவும்... ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

இத்தகைய தடைகளை உடைத்து, உங்களுடைய எண்ணத்தை செயல்படுத்தி, அதில் வெற்றியை பெற வேண்டும் என்றால்... எளிதான காரியம் அல்ல. இதற்கு இயற்கையும், சக மனிதர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் தங்களுடைய ஒத்துழைப்பை முழுமையாக வழங்குவதில்லை. இது பிரபஞ்சத்தின் சூட்சம விதி. இதன் காரணமாகவே பல்வேறு காரியங்களில் தடைகள் ஏற்பட்டு வெற்றி கிடைக்காத நிலை உருவாகிறது.

இதுபோன்ற தருணங்களில் தடைகளை உடைத்து எப்போதும் வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கான சூட்சம வழிபாடு ஒன்றை எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் காலையில் மஞ்சள் பொடியால் பிள்ளையாரை பிடித்து, அதற்கு குங்கும பொட்டிட்டு, சிறிது அருகம்புல்லை வைத்து வணங்கிட வேண்டும். இதனை வாரம் தவறாமல் தொடர்ந்து வணங்கி வர மாய தடைகள் அகலும்.

இதனுடன் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் பசுவிற்கோ அல்லது குரங்கிற்கோ பசியாறுவதற்கு அதற்கு விருப்பமான உணவை ( வாழைப்பழம் அல்லது அகத்தி கீரை) தானமாக வழங்கி வர வேண்டும்.

இந்த இரண்டு குறிப்புகளை தொடர்ச்சியாக பாவித்து வரும்போது உங்களுக்கு இருந்த தடைகள் அனைத்தும் விலகி செல்வதையும், உங்கள் எண்ணங்கள் தடையின்றி நிறைவேறுவதையும் அனுபவத்தில் உணரலாம்.‌

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31
news-image

தொழிலில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான சூட்சம...

2026-08-01 17:06:21
news-image

கர்ம வினைகளின் தாக்கத்தை அளிப்பதற்கான பிரத்யேக...

2026-07-31 17:00:24
news-image

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் -...

2026-07-31 15:07:30
news-image

நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான எளிய...

2026-07-30 17:19:48
news-image

சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதற்கான சூட்சம வழிமுறை..!?

2026-07-29 17:05:08