தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'மெஜந்தா' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மெஜந்தா' எனும் திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர், ஆர் ஜே ஆனந்தி, பக்ஸ் பகவதி பெருமாள், அர்ச்சனா ரவிச்சந்திரன், சரத் ரவி, சௌந்தர்யா சரவணன், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பல்லு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார். சைக்காலஜிக்கல் ரொமான்டிக் ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் ஜே. பி .லீலா ராம்- கே. ராஜு - பி. சரவணன்- ரேகா லீலா ராம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. பிரத்யேக வண்ணத்தின் பின்னணியில் காதலின் உணர்வையும், உளவியலையும் விவரிக்கும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அத்துடன் 'குறிப்பிட்ட வண்ணத்திற்கு பின்னால் கதையின் நாயகி எதிர்கொள்ள விரும்பாத உண்மை ஒன்று இருக்கிறது' என படக் குழுவினர் விவரித்திருப்பதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM