அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப் பகிர வேண்டாம் - மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு

13 Dec, 2025 | 03:00 PM
image

அனர்த்தச்சூழல் நிலவுவதால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் அல்லது பிரதான ஊடகங்களின் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மகளிர் மற்றும் சிறுவர்  விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தகைய செயல்கள் இச்சிறுவர்களின் அடையாளம் மற்றும் அந்தரங்கத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என்பதுடன், இந்த படங்கள் மற்றும் விவரங்கள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளின் கைகளில் சென்று தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும்.

சிறுவர்களை சுரண்டுதல் மற்றும் ஆட்கடத்தல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு அத்தகைய தகவல்களைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தகைய சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட  சிறுவர்கள் அல்லது அத்தகைய கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து உங்களிடம் தகவல் இருந்தால், தயவுசெய்து 1929 சிறுவர் உதவி இலக்கத்திற்கு (Child Helpline Service) தெரியப்படுத்தவும் அல்லது அருகிலுள்ள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி / சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கு அறிவிக்கவும்.

இந்த நேரத்தில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்து, அவர்களைப் பாதுகாப்பதற்கும் கவனித்துக்கொள்வதற்கும் நமது அன்பைப் பயன்படுத்துவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலவசக் கல்வியைப் பாதுகாக்க முன்னின்று போராடுவதால்...

2026-01-12 19:35:28
news-image

கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது...

2026-01-12 17:08:47
news-image

பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16...

2026-01-12 19:22:24
news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54