வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட வைத்தியசாலையை நேற்று வெள்ளிக்கிழமை (12) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
வெள்ள அனர்த்தம் காரணமாக சிலாப மாவட்ட வைத்தியசாலையில் 1200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு முக்கிய கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும், தற்போதுள்ள வளாகத்தை விட உயர் தரத்தில் வைத்தியசாலை கட்டப்படும் என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இதன்போது அங்கு தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் போது, வெளிநோயாளர் பிரிவு, வைத்தியசாலை வளாகம், வார்டுகள், மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, ஹீமோடையாலிசிஸ் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஆய்வகம், இரத்த வங்கி, எக்ஸ்ரே சிகிச்சை பிரிவு, சி.டி ஸ்கான் சிகிச்சை பிரிவு, மருத்துவ குடியிருப்புகள், மற்றும் சுகாதார ஊழியர் குடியிருப்புகள் உள்ளிட்ட வைத்தியசாலையின் அனைத்து பிரிவுகளையும் சுகாதார அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வைத்தியசாலையின் எதிர்கால சேவைகளை படிப்படியாக செயல்படுத்துவதற்கான செயற்திட்டம் மற்றும் முக்கிய தேவைகள் குறித்து வைத்தியசாலையின் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 650 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பணத்தைப் பயன்படுத்தி வைத்தியசாலையின் தற்போது கட்டுமானத்தில் உள்ள இரண்டு கட்டிட தொகுதிகளின் விரைவான அபிவிருத்தி குறித்து சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நன்கொடையாளர்கள் மற்றும் அரச சாரா நிறுவனங்கள் வழங்கும் உதவி மற்றும் மானியங்கள் என்பனவும் வைத்தியசாலையின் கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM