15 வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; காதலனான மாணவனை கைதுசெய்ய பொலிஸார் விசாரணை!

13 Dec, 2025 | 12:29 PM
image

புத்தளம் - ஆனைமடு பிரதேசத்தில் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மாணவன் ஒருவனை கைது செய்ய  ஆனைமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனைமடு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.

சந்தேக நபரான மாணவனும் அதே பாடசாலையில் கல்வி கற்கு வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவியும் சந்தேக நபரான மாணவனும் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தேக நபரான மாணவன் குறித்த மாணவிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வெளியே செல்ல வருமாறு அழைத்துள்ளார்.

இதனால் மாணவி தனது பெற்றோரிடம் பாடசாலைக்கு செல்வதாக பொய் கூறி ஆனைமடு பஸ் தரிப்பிடத்திற்கு சென்று பாடசாலை உடையை மாற்றிவிட்டு சந்தேக நபரான மாணவனுடன் இணைந்து வெளியே சென்றுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான மாணவன் குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சிறிது நாட்கள் சென்ற பின்னர் சந்தேக நபரான மாணவனுக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் இது தொடர்பில் ஆனைமடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சந்தேக நபரான மாணவனை கைது செய்ய  ஆனைமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்தியின் சில...

2026-09-05 13:21:49
news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-05 12:00:33
news-image

2029-2030க்குள் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்...

2026-09-05 11:30:36
news-image

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர...

2026-09-05 11:30:05
news-image

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட...

2026-09-05 11:28:44
news-image

கெப்பித்திகொல்லாவயில் காட்டு யானை தாக்கி இருவர்...

2026-09-05 11:38:53
news-image

பால் தேநீர் மற்றும் தேநீரின் விலை...

2026-09-05 11:21:34
news-image

தொம்பே பகுதியில் 75 லீற்றர் சட்டவிரோத...

2026-09-05 11:18:09
news-image

வாழ்வாதாரம் பறிபோகும் அபாயத்தில் இளம் சாரதிகள்!...

2026-09-05 11:08:02
news-image

மிஹிந்தலையில் கைவிடப்பட்ட பொதியிலிருந்து T56 துப்பாக்கி...

2026-09-05 10:34:27