அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தாய்லாந்து மற்றும் கம்போடியாக்கிடையிலான போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தாய்லாந்தின் பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் இதனை மறுத்து, “நமது நிலம் மற்றும் மக்களுக்கு மேலும் எந்த ஆபத்தும் இல்லாமல் இருக்கும்வரை போர் நடவடிக்கையை தொடருவோம்” என்று தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுட்டுள்ளன.
சனிக்கிழமை (13) தாய்லாந்து இரு F-16 ரக போர் விமானங்கள் மூலம் பல இலக்குகளை நோக்கி ஏழு குண்டுகளை வீசியன. புர்சாட் பிராந்தியத் திமோர் டா பகுதியில் இரண்டு ஹோட்டல்கள் குண்டுவீச்சுக்கு உள்ளாகின.
தாய்லாந்து கடற்படை கோஹ் கொங் பிராந்தியத்தில் 20 குண்டுகளை வீசியது இதன் காரணமாக ஹோட்டல்கள் மற்றும் கடற்கரைகள் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை (09) தொடங்கப்பட்ட தாக்குதலில் இதுவரையில் இரண்டு நாடுகளிலும் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், சுமார் 6 இலட்சம் மக்கள் இடம்பெயர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM