(சரண்யா பிரதாப்)
நேபாளத்தைச் சேர்ந்த தேவி கட்கா, போர்க் காலச் சூழலில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள். தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பெண்களின் கதைகளைப் போலவே தனது கதையும் வரலாற்றிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்கிறார். அதைத் தடுக்க வேண்டுமென்ற உறுதியே அவரை செயல்படத் தூண்டுகிறது. அமைதியான ஆனால் விடாமுயற்சியான தனது நடைமுறையில், தேவியின் நீதி கோரிக்கை நாட்டின் மிக உயர்ந்த அரசியல் நிலைகளுக்குப் போய் சேர்கிறது.
1996 முதல் 2006 வரை, மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் நேபாளத்தில் அரசாட்சியை கலைக்க முயன்ற உள்நாட்டு போர் நடைபெற்றது. அப்போது அவரது சகோதரர் மாவோயிஸ்ட் தலைவராக இருந்ததால் அவரைக் தேடிய நேபாள படையினர் 17 வயதுடைய தேவியை கைது செய்தனர். அந்தக் கைதின் போது, அவர் கடுமையான சித்திரவதை மற்றும் பல்வேறு பாலியல் வன்முறைகளை சந்தித்தார். அதன்பின், அவர் தானே மாவோயிஸ்ட் படையணியில் இணைந்தார்; பின்னர் முழுக்க பெண்கள் கொண்ட படைத்தளபதி பிரிவின் தலைவராக உயர்ந்தார்.
2014 முதல், நேபாள உண்மை மற்றும் சமரச ஆணையம் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரித்து வந்தாலும், பெண்கள் மீது இரு தரப்பினரும் மேற்கொண்ட எண்ணற்ற பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன. நீண்ட மௌனத்திற்குப் பின்னர், தற்போது தேவி பேசத் தீர்மானித்துள்ளார். “நான் பேசவில்லை என்றால், யாரும் பேசப் போவதில்லை,” என அவர் கூறுகிறார்.
- ஆவணப்படம் தேவியின் வாழ்க்கையை நெருக்கமாகப் பின்தொடர்கிறது
- மனஅழுத்தத்தைக் கையாள மனநல ஆலோசகரின் உதவி,
- மகளுடன் உறவை சீரமைக்க முயற்சிகள்,
- அவமானம் மற்றும் குற்ற உணர்வை துறந்து எழும்பும் பிற உயிர் பிழைத்தவர்களை ஊக்குவித்தல்,
- அவர்களையும் இந்தப் போராட்டத்தில் இணைக்க அழைத்தல்
இவை அனைத்தும் ஆழமான மனித உணர்வுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது நாட்குறிப்புகள், காப்பக ஆவணங்கள், பழைய காட்சிகள்—இவற்றின் மூலம் தேவி அதிகாரிகளால் அழிக்கப்பட்ட வரலாற்றை மீண்டும் கட்டமைக்கிறார். முன்னாள் மாவோயிஸ்ட் போராளி, தாய், மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் அனுபவித்த பெண் என்ற மூன்று அடையாளங்களையும் தாங்கியபடி, அவர் நீதி கோரிக்கையைத் தொடர்கிறார்.போராட்டத்தின் பயனாக 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நேபாள அரசு “(CRSV )முரண்பாடு தொடர்பான பாலியல் வன்முறை” எனப்படும் முக்கியமான சட்டத்தை நிறைவேற்றியது. இன்று வரை ஆயிரக்கணக்கான பெண்கள் தேவியின் முயற்சியால் முன்னேறி, அங்கீகாரம், நீதி, மற்றும் நஷ்டஈடு பெற முயற்சி செய்து வருகின்றனர்.
“தேவி” ஆவணப்படத் திரையிடல்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, நேபாள ஆவணப்படமான “தேவி” 11 ஆம் திகதி (வியாழக்கிழமை) இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் திரையிடப்பட்டது. இந்த திரையிடல், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நெதர்லாந்து தூதரகத்தால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆவணப்படத்தை இயக்குனர் சுபினா ஸ்ரேஸ்தா இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் போர்க் காலத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் ஒருவர் நீதிக்காக நடத்திய உண்மையான போராட்டத்தை வெளிப்படுத்துகிறது.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை பத்திரிகை ஸ்தானத்தின் தலைவர் குமார் நடேசன்,
மனித உரிமைகள் உலகின் சுதந்திரம், நீதி, அமைதிக்கான அடித்தளமாக இருப்பதை வலியுறுத்தினார்.
“தேவி” ஆவணப்படம் பாலியல் வன்முறையிலிருந்து உயிர் பிழைத்த ஒரு பெண் முனைப்புடன் நீதி தேடுவதை எடுத்துக்காட்டுகிறது. ஊடகத்துறை மனித உரிமைகளை பாதுகாத்து நிற்கும் ஒரு முக்கிய தூணாக உள்ளது, உண்மைகளை உலகிற்கு கொண்டு சேர்ப்பது ஊடகவியலாளர்களின் பொறுப்பு, ஊடகம் சுதந்திரமாக இருந்தால் மட்டுமே மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்ததுடன் நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய நெதர்லாந்து தூதரகத்திற்கும் நன்றியைத் தெரிவித்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட நெதர்லாந்து தூதுவர் வீபே ஜேக்கப் டி போயர்,
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் உயிரிழந்தோருக்கு இரங்கலைத் தெரிவித்தார். நெதர்லாந்து, ஐ.ரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. வழியாக இலங்கைக்கு அவசர நிதி உதவி வழங்கி வருவதாகவும், மறுசீரமைப்பு திட்டங்களிலும் பங்கேற்றுள்ளோம். "Orange the World" இயக்கத்துடன் இணைந்து, “தேவி” திரைப்படம் நீதிக்காக போராடும் பெண்களை கௌரவிக்கிறது.
பாலின அடிப்படையிலான வன்முறை உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. உலகில் மூன்று பெண்களில் ஒருவருக்கு வாழ்நாளில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக நேரிடுகிறது. மனித உரிமைகள், ஊடகச் சுதந்திரம், பாலின சமத்துவம், LGBTQ+ உரிமைகள் ஆகியவற்றை நெதர்லாந்து முன்னுரிமையுடன் ஆதரிக்கிறது என்றார்.

மனித உரிமை செயற்பாட்டாளர் அனோமா ராஜகருணா கருத்து வெளியிடுகையில்,
பேரிடர் சூழ்நிலை காரணமாக தாலதாமதமானலும் படம் பொருத்தமான நேரத்தில் திரையிடப்பட்டுள்ளது.“தேவி” படம் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் ஆவணப்படம், பெண்கள் மீதான போர்கால பாலியல் வன்முறையின் உண்மையை ஆவணப்படுத்தும் பதிவு, இலங்கை மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள பெண்களின் அனுபவங்களுடனும் ஆழமாக இணையும் படைப்பு என்று விவரித்தார்.
சர்வதேச அங்கீகாரம்
“தேவி” பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. குறிப்பாக, 2024 நியூசிலாந்து DocEdge விழாவில் பிரதான விருது, தெற்காசிய திரைப்பட ஜூரி விருது என பல முக்கிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM