மசகு எண்ணெய் கடத்தல் குற்றச்சாட்டு : வெனிசுலா கப்பல் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

13 Dec, 2025 | 10:23 AM
image

உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் வளங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் வெனிசுலா, தனது பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக மசகு எண்ணெய் உற்பத்தியை கொண்டுள்ளது.

இந்நிலையில், கரீபியன் கடற்பகுதி வழியாக ஈரானுக்கு மசகு எண்ணெய் கடத்தி செல்ல உதவியதாக வெனிசுலா மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டின்படி, இந்த கடத்தலின் மூலம் ஈரானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு வருவாய் ஈட்ட உதவப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு ஈரானுக்கு மசகு எண்ணெய் கடத்துவதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது.

ஆனால் அந்த தடையை மீறி, வெனிசுலாவில் இருந்து ஈரானுக்கு மசகு எண்ணெய் கொண்டு சென்ற கப்பல் ஒன்று பயணம் மேற்கொண்ட நிலையில், அதை அமெரிக்க கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்தச் சூழலில், மசகு எண்ணெய் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் வெனிசுலா அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனம் ஒன்றுக்கும், அதனுடன் தொடர்புடைய ஆறு கப்பல்களுக்கும் அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் தடைகள் மூலம், குறித்த நிறுவனம் மற்றும் கப்பல்களின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சென்றார்...

2026-09-12 14:21:54
news-image

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை...

2026-09-12 14:11:35
news-image

இலங்கைத் தமிழரான கம்சி குணரட்ணம் நோர்வே...

2026-09-12 12:26:55
news-image

இந்தோனேசியா ஜகார்த்தாவில் பூமியதிர்ச்சி - பொதுமக்களுக்கு...

2026-09-12 11:09:01
news-image

பிலிப்பைன்ஸில் படகு தீப்பற்றி எரிந்து விபத்து...

2026-09-12 10:36:07
news-image

பிரான்ஸில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து...

2026-09-12 09:32:10
news-image

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இந்திய...

2026-09-11 15:07:46
news-image

9/11 பேரழிவு : அமெரிக்காவை உலுக்கிப்...

2026-09-11 14:47:24
news-image

மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை...

2026-09-11 14:39:40
news-image

பட்டிமன்ற நடுவரும் தமிழ் இலக்கியவாதியுமான சாலமன்...

2026-09-11 14:13:15
news-image

நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார்...

2026-09-11 13:29:38
news-image

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை: சிட்னி...

2026-09-11 16:57:18