லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை!

Published By: Digital Desk 1

13 Dec, 2025 | 10:23 AM
image

அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த ஒருவர், மேற்கு லண்டனில் 15 வயது சிறுமியைக் கடத்தி, துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக வெளியான தகவல்களுக்கு குறித்த இலங்கை பிரஜை மறுப்பு தெரிவித்துள்ளார்.

20 வயதான குறித்த நபர், ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார். 

இதன்போது, சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியம் அளித்த அவர், கடத்தல், துஷ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோக செயற்பாடு உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் தாம் குற்றமற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த சம்பவம் கடந்த நவம்பர் முதலாம் திகதி மேற்கு லண்டனில் உள்ள ஃபெல்தாமில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

புகலிடம் கோருபவர்களை தங்க வைக்க அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் மூன்று நட்சத்திர செயிண்ட் கில்ஸ் விடுதியில்; வசித்து வரும் நிலையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். 

இந்த நிலையில், அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை 2026 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதிக்கு, நீதிபதி ஒத்திவைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40
news-image

கொள்கைக்கு எதிரான விடயங்களை அரசு நிச்சயம்...

2026-08-15 10:38:21
news-image

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் இந்தியாவின்...

2026-08-15 11:21:07
news-image

ஏழை, நடுத்தர மக்களையும் இணைத்தே நாட்டின்...

2026-08-15 10:12:59
news-image

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா...

2026-08-15 09:54:57
news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43