காசாவில் ‘பைரன்’ புயல் தாக்கம் ; 14 பேர் பலி

13 Dec, 2025 | 09:47 AM
image

காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்க அனுமதி வழங்க வேண்டும் என காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

மழை மற்றும் குளிர் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாக அந்நாட்டு  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது கடும் குளிர், வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம்  10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில், காசாவுக்குள் அவசர உதவிப் பொருட்கள், தங்குமிட வசதிகள்  மற்றும் குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை வழங்க  சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சென்றார்...

2026-09-12 14:21:54
news-image

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை...

2026-09-12 14:11:35
news-image

இலங்கைத் தமிழரான கம்சி குணரட்ணம் நோர்வே...

2026-09-12 12:26:55
news-image

இந்தோனேசியா ஜகார்த்தாவில் பூமியதிர்ச்சி - பொதுமக்களுக்கு...

2026-09-12 11:09:01
news-image

பிலிப்பைன்ஸில் படகு தீப்பற்றி எரிந்து விபத்து...

2026-09-12 10:36:07
news-image

பிரான்ஸில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து...

2026-09-12 09:32:10
news-image

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இந்திய...

2026-09-11 15:07:46
news-image

9/11 பேரழிவு : அமெரிக்காவை உலுக்கிப்...

2026-09-11 14:47:24
news-image

மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை...

2026-09-11 14:39:40
news-image

பட்டிமன்ற நடுவரும் தமிழ் இலக்கியவாதியுமான சாலமன்...

2026-09-11 14:13:15
news-image

நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார்...

2026-09-11 13:29:38
news-image

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை: சிட்னி...

2026-09-11 16:57:18