இன்றைய சூழலில் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு வெவ்வேறு வகையினதான கஷ்டங்கள் நாளாந்தம் இருந்து கொண்டிருக்கிறது. சிலருக்கு திறமைக்கு ஏற்ற பொருத்தமான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற கஷ்டம்- சிலருக்கு கடுமையாக உழைத்தாலும் வாடிக்கையாளர்களின் வரவு அதிகரிக்கவில்லையே..! லாபம் கிடைக்கவில்லையே..!! என்ற மனக் கஷ்டம்.
சிலருக்கு 34 வயதை கடந்து கொண்டிருக்கிறதே.. இன்னும் திருமணம் நடைபெறவில்லையே..! நடைபெறுமா? நடைபெறாதா? என்ற சலனத்தினால் ஏற்படும் கஷ்டம்- வேறு சிலருக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் புத்திர பேறு கிடைக்கவில்லையே..! என்ற கஷ்டம் இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான கஷ்டங்களுடன் தான் காலத்தை கடத்திக் கொண்டிருப்பார்கள்.
இதற்காக அவர்கள் பல்வேறு பரிகாரங்களை செய்து இருந்தாலும் அதற்கான பலன் முழுமையாக கிடைத்திருக்காது அல்லது கிடைப்பதில்லை. இதற்கு ஆற்றல் வாய்ந்த சூட்சம குறிப்பு ஒன்றினை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவை எளிமையானதாக இருந்தாலும் வலிமை வாய்ந்தவை என குறிப்பிடும் அவர்கள் இதற்கான சில சூட்சமமான குறிப்புகளை துல்லியமாக அவதானித்து பின்பற்றினால்... சுப பலன் உறுதியாக கிடைக்கும் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: பருத்தியாலான சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத் துணி தலா ஒரு மீற்றர்- பன்னீர் - பசும்பால்- ஜவ்வாது -இலுப்பை எண்ணெய் - வால் மிளகு - தேன்- வாயகன்ற அகல் விளக்கு - தேவதாரு+ திரவிய பட்டை- ஒரு பித்தளை தட்டு
முதலில் சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்திலான துணியை வாங்கி அதனை நீரில் நன்றாக அலசி, நிழலில் உலர்த்திடவேண்டும். நன்றாக உலர்ந்து அதன் விற்பனைத் தன்மை மாற்றம் அடைந்த பிறகு.. அதனை பன்னீர், ஜவ்வாது மற்றும் பசும்பாலில் நனைத்து ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை கசக்கிப்பிழியாமல் நிழலில் உலர்த்திடவேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு அதனை திரியாக உருவாக்கிட வேண்டும்.
அதன் பிறகு நாட்டு மருந்து கடையில் இலுப்பை எண்ணெய் ஒரு லீற்றர் வாங்கிட வேண்டும். அதனைத் தொடர்ந்து 20 கிராம் அளவிற்கு வால் மிளகு வாங்கி, அதனை பொடியாக்கி இலுப்பை எண்ணெயில் கலந்திட வேண்டும். இதில் சிறிதளவு ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் உருவான தேனையும் கலந்திடவேண்டும்.
அதன் பிறகு ஒரு பித்தளை தட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தேவதாரு மற்றும் திரவிய பட்டை எனும் மூலிகை பொருட்களை வாங்கி அதன் மீது வைத்திட வேண்டும். இந்த பொருட்களின் மீது வாயகன்ற அகல் விளக்கினை ஒன்றை வைத்து, நீங்கள் தயாரித்த எண்ணெய் மற்றும் திரியை வைத்து தீபம் ஏற்றி, கஷ்டங்கள் நீங்கிட வேண்டும் என மனம் உருக காலையில் நீராடிய பிறகு உங்களது வீட்டின் பூஜை அறையில் பிரார்த்திக்க வேண்டும்.
நாளாந்தம் உங்களது வீட்டில் இத்தகைய பிரத்யேக தீபத்தை ஏற்றி வழிபட்டால் 48 நாட்களில் உங்களது கஷ்டம் குறைவதை உணரலாம். இதனை நீங்கள் 48 நாட்களுக்குப் பிறகும் தொடர்ந்து பாவித்தால் பலன் உண்டு என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM