சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் 'ராசாதி ராசா..' எனும் 'மை லார்ட்' பட பாடல்

12 Dec, 2025 | 06:09 PM
image

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் விளிம்பு நிலை மக்களின் ஜனநாயக உரிமையை சுரண்டுவதை முன்வைத்து இயக்குநர் ராஜு முருகன் - பாடலாசிரியர் யுக பாரதி - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் - கூட்டணியில் உருவாகி இருக்கும் 'ராசாதி ராசா வைகுண்ட ராசா' எனும் 'மை லார்ட்' படத்தின் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மை லார்ட் 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. அச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயப்பிரகாஷ், வசுமித்ரா , கோபி நயினார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். சமூக விழிப்புணர்வை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ... இப்படத்தில் இடம்பெற்ற 'ராசாதி ராசா வைகுண்ட ராசா கட்டுக்குள்ள நிக்காம நீ கலக்குறியே ராசா..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத பின்னணி பாடகர்கள் வி. எம். மகாலிங்கம் மற்றும் முத்து சிற்பி ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். கிராமத்து மக்களின் விருப்பத்திற்குரிய எளிய துள்ளல் இசை பாணியிலான இந்த பாடல் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த பாடலில் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள்- மக்களின் ஜனநாயக உரிமையை இரக்கமே இல்லாமல் சுரண்டுவது தொடர்பாக பாடல் வரிகள் இடம் பிடித்திருப்பதால் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right