அட்டன் - நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் புதிய இரும்பு பாலம் அமைத்து போக்குவரத்துக்கு அனுமதி

12 Dec, 2025 | 03:16 PM
image

அட்டன் - நோர்டன்பிரிட்ஜ் பிரதான விதியில் காசில்ரீ பகுதியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் தடைபட்டிருந்த போக்குவரத்து  சனிக்கிழமை (13) முதல்  இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நோர்வுட் வீதி அபிவிருத்தி  அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பாலத்தில் உள்ள இணைப்புகளும் ஏற்கனவே பழுதாகி இருந்தது மேலும் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக காரணமாக கடுமையாக சேதம் அடைந்து கடந்த மாதம் (29)  பாலம் இடிந்து விழுந்தது, அன்று முதல் குறித்த வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.

அதன் பின்னர் பல்லேகெலே இலங்கை இராணுவத்தின் 31வது இராணுவ பொறியியல் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பொறியியல் பிரிவுடன் இணைந்து 15 மீட்டர் நீளமுள்ள புதிய  இரும்பு பாலத்தை பொருத்தும் பணிகள் முழுவதும் முடிவடைந்து உள்ளது.

எனவே  பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து சனிக்கிழமை (13) முதல்  போக்குவரத்துக்கு திறக்கப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52
news-image

எரிபொருள் கியூ.ஆர் குறியீடு முறை முழுமையாக...

2026-03-15 16:04:28