முன்னாள் நிதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பெசுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி விசாரணைக்காக அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (12) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முனனிலையில்; விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின்போது, அரச தரப்பு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
பின்னர் நீதிபதி மேலதிக சாட்சிய விசாரணையை ஜனவரி 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதி ரவி கருணாநாயக்க மீது, அர்ஜுன் அலோசியஸ் பணிப்பாளராக உள்ள தனியார் நிறுவனத்தின் பெயரில் கையகப்படுத்தப்பட்ட வீட்டு வளாகத்தில், வசித்ததன் மூலம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் பிரிவு 19(c) இன் கீழ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும், அர்ஜுன் அலோசியஸ் மீது, ஆணைக்குழு இரண்டாவது பிரதிவாதியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM