நுவரெலியாவுக்குச் செல்லும் எந்தவொரு வீதியிலும் இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தாதிருக்க வாகன சாரதிகளை நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (11) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கம்பளை - நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகிந்துல பகுதியிலிருந்து போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
நிலவும் வானிலை காரணமாக வீதிகளில் மேலும் மண் மேடுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 'தித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருட்கள் உட்பட தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் நோக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத சிலர் கூறும் சில அறிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM