ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை விடுவிப்பு

Published By: Digital Desk 3

12 Dec, 2025 | 09:53 AM
image

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (12) 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் 1 மீற்றர் (39 அங்குலம்) உயரத்துக்கு அலைகள்  எழும்பக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பகுதியில் திங்கட்கிழமை இரவு 7.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து,  அமோரி மாகாணத்தின் கடற்கரையில் 20 கிலோ மீற்றர் (12 மைல்) ஆழத்தில் இன்றையதினம் அந்நாட்டு நேரப்படி காலை 11:44 மணிக்கு (0244 GMT) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதன் பின்னர் வடக்கில்  கொக்கைடோ முதல் டோக்கியோவின் கிழக்கே உள்ள சிபா வரை வசிப்பவர்கள் ஒரு வாரத்திற்குள் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசாங்கம் விசேட எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது.

இன்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜப்பானின் 1-7 நில அதிர்வு தீவிர அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான...

2026-07-17 22:32:10
news-image

தொழிற்கட்சியின் தலைவராக அண்டி பர்ன்ஹாம் தெரிவு;...

2026-07-17 16:16:53
news-image

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

2026-07-17 14:32:09
news-image

நியூசிலாந்தில் முதல்முறையாக உள்நாட்டுப் பறவைக்கு H5N1...

2026-07-17 13:34:01
news-image

இந்தியாவில் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை...

2026-07-17 13:01:56
news-image

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: சர்வதேச...

2026-07-17 12:33:31
news-image

ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 7...

2026-07-17 12:19:37
news-image

மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்:...

2026-07-17 09:18:48
news-image

மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும்...

2026-07-16 14:45:24
news-image

கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்டது புதிய குரங்கு...

2026-07-16 12:23:34
news-image

கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றம்...

2026-07-16 11:38:17
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பொலிஸார்...

2026-07-16 08:57:12