மட்டக்களப்பு லொயிட் அவன்னியூக்கு முன்பால் உள்ள வாவிக்கரையோரம் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது .

இன்று மாலை சுமார் 7.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த  சடலம் மீட்கப்படுள்ளது.

சுமார்  60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளதாக முதற்கட்ட விசரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் அடையாளம்  காணப்படாத காரணத்தினால் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்படுள்ளது.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.