பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இயன்றளவு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் : அரசாங்கம்

Published By: Vishnu

11 Dec, 2025 | 09:45 PM
image

(எம்.மனோசித்ரா)

வீடுகளை தூய்மைப்படுத்தி அவற்றில் குடியேறக் கூடியவர்களுக்கு அதற்காக 25 000 ரூபாவும், அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக  மேலும் 50 000 ரூபா வழங்கப்படுகிறது. இந்த 75 000 ரூபாவில் மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் இயன்றளவான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (10) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில்,

இயற்கை அனர்த்தங்களால் சுமார் 18 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 80,000க்கும் மேற்பட்டோர் இன்றும் இடைத்தங்கல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனர்த்தங்களின் போது வழங்கப்படாதளவு நிவாரணங்கள் எமது அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நிவாரணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பெற்றுக் கொள்வதில் காணப்பட்ட இடையூறுகள் குறிப்பிடத்தக்களவு தகர்த்தப்பட்டுள்ளன. வீடுகளை தூய்மைப்படுத்தி அவற்றில் குடியேறக் கூடியவர்களுக்கு அதற்காக 25 000 ரூபா வழங்கப்படுகிறது. மேலும் 50 000 ரூபா அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படுகிறது. இந்த 75 000 ரூபாவில் மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக விவசாய நிலங்கள், பயிர் செய்கை பாதிக்கப்பட்டிருப்பின் ஹெக்டயாருக்கு 2 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படுகிறது. அதேபோன்று தொழிற்சாலைகள் சேதமடைந்திருந்தால் அவற்றின் உரிமையாளர்களுக்கும் 2 இலட்சம் ரூபா வழங்கப்படும். மேலும் விலங்கு பண்னைகள் வைத்திருப்பவர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் இவ்வாறு நிவாரணம் வழங்கப்படுகிறது.

இவற்றுக்கு அப்பால் டிசம்பரிலிருந்து 3 மாத காலத்துக்கு 50 000 ரூபாவை வாழ்வாதாரக் கொடுப்பனவாக வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழங்க முடியுமான சகல நிவாரணங்களையும் வழங்கியிருக்கின்றோம். பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு 25 இலட்சம் ரூபாவும், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும். நாம் வழங்கும் தொகை வீட்டின் பெறுமதிக்கு குறைவாகவே அல்லது அதிகமாகவோ இருக்கலாம். எவ்வாறிருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காகவே இவை வழங்கப்படுகின்றன.

இவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்திலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் மேலும் வரியை அதிகரிக்காமல், வரி சேகரிப்பு பொறிமுறையை வலுப்படுத்தி வரி வருமானத்தை முறையாக முகாமைத்துவம் செய்தால் மாத்திரமே இவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும். அனர்த்தங்கள் சொத்துக்களை மாத்திரம் சேதப்படுத்தவில்லை. பொருளாதாரத்தையும் சிதைத்துள்ளது. இவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16...

2026-01-12 19:22:24
news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54
news-image

துணை மருத்துவப் பட்டதாரிகளுக்கு அரச நியமனம்...

2026-01-12 18:03:56
news-image

ஐக்கிய மக்கள் சக்தி மாதர் அணித்...

2026-01-12 17:20:54