அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு கடன் மீள் செலுத்தல் காலத்தை 3 - 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய தீர்மானம் - அரசாங்கம் அறிவிப்பு 

Published By: Vishnu

11 Dec, 2025 | 09:42 PM
image

(எம்.மனோசித்ரா)

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன்களை மீள செலுத்துவதற்கான காலத்தை, பாதிப்புக்களின் அடிப்படையில் 3 - 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறுகிய காலத்துக்குள் அவசர நிலைமைகளின் போதான புதிய கடன்களை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கியால் சகல வங்கிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (10) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில்,

கடன் பெற்றோருக்கான சலுகைகள் தொடர்பில் கடந்த 5ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியினால் சகல வங்கிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முழுக்கடன் அல்லது கடனுக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கான காலத்தை 3 - 6 மாதங்கள் வரை, பாதிப்புக்களை ஆராய்ந்து அவற்றுக்கமைய தள்ளுபடி செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடன் மீள் செலுத்தல் தள்ளுபடி செய்யப்படும் காலப்பகுதிக்குள் கடன் ஒப்பந்தத்தின் போது குறிப்பிடப்பட்ட வட்டியை விட அதிக வட்டியை அறவிடாமல் இருப்பதற்கும், காலம் தாழ்த்தப்படுவதற்கு மேலதிக வட்டியை அறவிடாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று புதிய கடன்களை வழங்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வரவு - செலவு திட்டத்தில் இவ்வாறு நிவாரணக் கடன் வழங்குவதற்காக 81 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியையும் புதிய கடன் வழங்கலின் போது பயன்படுத்த முடியும். டிசம்பர் மாதத்துக்குள் இந்தக் கடனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்துக்கான வரவு - செலவு திட்டத்தில் இதற்காக மேலும் 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சி பிரிவின் கடன் திட்டங்களை ஒரு வரையறைக்குள் ஒருங்கிணைத்தல் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சிகளை மீள கட்டியெழுப்புவதற்கு உதவும் கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல ஆண்டுகளாக நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சி பிரிவை பலப்படுத்துவதற்காக அரசு பல்வேறு சலுகை கடன் திட்டங்கள் அமுல்படுத்தியுள்ளது.

 அவற்றில் கைத்தொழில் மற்றும் உறபத்தி துறைகளில் முதலீடு செய்வதற்காக  SMILE – கட்டம்  II>    சுற்றாடல் நேய நிதியாக்கலுக்காக  E-FRIEND  கட்டம்  II>   மற்றும் அனைத்து நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சிகளுக்கு விரிவான மற்றும் இலகுவான பிரவேசத்துடன் நிதியுதவி வழங்கும், அரசினால் நிதி வழங்கப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சி பிரிவை மீண்டும் உயிரோட்டம் பெற செய்தல் ஆகிய கடன் திட்டங்களை ஒருங்கிணைத்து, 2026 ஆண்டிலிருந்து  RE-MSME PLUS  திட்டத்தை அமுல்படுத்துவதற்கும், பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சிகளை மீண்டும் உயிரூட்டுவதற்காக பேரிடர் நிவாரண கடன் திட்டம் எனும் பெயரில் புதிய கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

 அதன்கீழ் அண்ணளவாக 130,000 தொழில்முயற்சிகளுக்கு உடனடி மற்றும் மத்திய கால நிதியுதவி வழங்கும் செயன்முறையை அறிமுகம் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. உத்தேசக் கடன் திட்டத்தின் கீழ் நுண் தொழில்முயற்சிகளுக்கு 250,000 ரூபா மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சிகளுக்கு ஆகக்கூடியது 1,000,000 ரூபா தொகையை 6 மாத சலுகைக் காலத்துடன் வருடாந்தம் 3மூ வட்டி விகிதத்தில் 3 ஆண்டு காலப்பகுதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கடன் திட்டத்தை அமுல்படுவதற்கு சுநு-ஆளுஆநு – னுளையளவநச சுநடநைக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலவசக் கல்வியைப் பாதுகாக்க முன்னின்று போராடுவதால்...

2026-01-12 19:35:28
news-image

கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது...

2026-01-12 17:08:47
news-image

பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16...

2026-01-12 19:22:24
news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54