பேரிடர் பாதிப்படைந்த வழிபாட்டு தலங்களை சுத்தம் செய்து மீள ஆரம்பிக்க உதவ அமைச்சரவை அனுமதி

11 Dec, 2025 | 05:57 PM
image

பேரிடர் தாக்கத்துக்கு உள்ளான வழிபாட்டுத் தலங்களை துப்பரவு செய்து, செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க உதவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து, சமய நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக உதவி வழங்குதல் பொருத்தமானதென அரசு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, வழிபாட்டு தலங்களை துப்பரவு செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக ரூபா 25000/- கொடுப்பனவை வழங்குவதற்கும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்வதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48
news-image

இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு...

2026-09-14 13:54:26
news-image

சிறைச்சாலை நாமலுக்கு புதிதல்ல; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய...

2026-09-14 16:57:09
news-image

தெஹிவளையில் சிறுவர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா கடும்...

2026-09-14 13:56:05
news-image

ஊழல்வாதிகளுடன் ஒப்பிட்டு நெல்சன் மண்டேலாவை அவமதிக்க...

2026-09-14 13:57:00
news-image

வறட்சி நிலை: யால, குமண பூங்காக்கள்...

2026-09-14 15:17:18
news-image

யூரியா உரக் கொள்வனவில் ரூ.1,867 மில்லியன்...

2026-09-14 15:27:52
news-image

மக்கள் பங்கேற்புடன் வெளிப்படையான புதிய அரசியல்...

2026-09-14 15:45:54