பேரிடருக்குப் பிறகு மீள்கட்டமைப்புத் தேவைகளுக்கு உலக வங்கி திட்டத்தில் அவசர பதில்வினையாற்றல் கூறுகளை செயல்படுத்த அமைச்சரவை அனுமதி

11 Dec, 2025 | 05:46 PM
image

பேரிடருக்கு பின்னரான மீள்கட்டமைப்புத் தேவைகளுக்கு உதவி வழங்குவதற்காக தற்போது அமுல்படுத்தப்படும் உலக வங்கித் திட்டத்தில் உள்ளடங்கியுள்ள அவசர பதில்வினையாற்றல் கூறுகளை இயங்கு நிலைக்கு கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மைக்ககால வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடும் மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு நாடு பூராவும் ஏற்பட்டது. அதன் மூலம் உயிரிழப்புகள், மக்கள் இடம்பெயர்வு, வாழ்வாதாரம் அழிவடைந்து மற்றும் அத்தியாவசிய பொது வசதிகள் அழிவடைந்தமையுடன், விவசாயக் காணிகளும் அழிவடைந்துள்ளன.

மேற்குறித்த நிலையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், உடனடி பதில்வினையாற்றுதல் தொடக்கம் நீண்ட கால தலையீடுகள் வரையான விரிவான வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இருதரப்பு மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி பங்காளர்கள், கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஏற்கனவே உடனடி தலையீடு மேற்கொண்டுள்ளன அல்லது தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.

அதற்கமைய சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக கட்டியெழுப்புவதற்காக அவ்வாறான உட்கட்டமைப்பு வசதிகள் விடயப்பரப்பு தொடர்பான வெளிநாட்டு நிதியின் கீழ் தற்போது அமுல்படுத்தப்படும் அவசர பதில்வினையாற்றல் கூறுகளை இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கும், உத்தேச அவசர பதில்வினையாற்றல் கூறுகள் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 92 – 112 இடையிலான அமெரிக்க மில்லியன் டொலர் தொகையை பெறுவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக  ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரூ.24 பில்லியன் நட்டத்தில் இருந்து இலாப...

2026-09-09 12:25:53
news-image

20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மலையக மக்களின்...

2026-09-09 17:35:50
news-image

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்...

2026-09-09 12:45:30
news-image

மலையக மக்களின் வீடு, காணி உள்ளிட்ட...

2026-09-09 17:31:26
news-image

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி மக்கள்...

2026-09-09 13:44:30
news-image

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட...

2026-09-09 17:30:07
news-image

மன்னார்–இராமேஸ்வரம் நேரடி பயணிகள் கப்பல் சேவையை...

2026-09-09 14:12:24
news-image

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள ஈரான் கப்பல்...

2026-09-09 17:02:51
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24