கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி

11 Dec, 2025 | 05:38 PM
image

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய (ஓட்டிசம்) மற்றும் நரம்பு விருத்தி அலகை விரிவாக்குதல் மற்றும் அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2025 வரவுசெலவு திட்ட முன்மொழிவுக்கு ஏற்ப சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ற வகையில் ஓட்டிசம் உள்ளிட்ட நரம்பு விருத்தி இயலாமைக்குட்பட்ட பிள்ளைகளுக்கான சிகிச்சை நிலையத்தை கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நிறுவுவதற்காக முன்னுரிமை வழங்குவதற்கு 2025-10-21 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேற்குறித்த திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுச் செலவு ரூபா 398.09 மில்லியன்களாகும். உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, மேற்குறித்த திட்டத்தை அமுல்படுத்தவதற்கு தேவையான நிதி மத்திய கால வரவுசெலவு சட்டகத்திற்குள் ஏற்பாடு செய்து திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகராம் வழங்கியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54
news-image

துணை மருத்துவப் பட்டதாரிகளுக்கு அரச நியமனம்...

2026-01-12 18:03:56
news-image

ஐக்கிய மக்கள் சக்தி மாதர் அணித்...

2026-01-12 17:20:54
news-image

இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல்...

2026-01-12 17:19:16