பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து சமீபத்தில் கழற்றி விடப்பட்ட உமர் அக்மல் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மீது முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

இது குறித்து உமர் அக்மல் தெரிவிக்கையில்,

‘எனது உடல் தகுதி பிரச்சினையை சரி செய்ய பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை அணுகிய போது அவர் என்னை மோசமான வார்த்தைகளால் வசைபாடினார். இன்ஸமாம், முஸ்தாக், அகமது ஆகியோர் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தது. அத்துடன் அவர் தேசிய கிரிக்கெட் அக்கடமியில் நான் பயிற்சி செய்யவும் அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டார். 

எந்தவொரு போட்டியாக இருந்தாலும் அவர் யாரையாவது ஒருவரை திட்டிக் கொண்டு தான் இருப்பார். அவரது இந்தச் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். 

இந்நிலையில் அனுமதி இல்லாமல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தமைக்கு விளக்கம் அளிக்கமளித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உமர் அக்மலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.