ஜேர்மன் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு தரையிறக்க நடவடிக்கை சேவை ஒப்பந்தம்!

11 Dec, 2025 | 07:56 PM
image

ஜேர்மன் கிரேன்க்ஃபர்ட் விமான நிலையத்தில் (FRA) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு தரையிறக்க நடவடிக்கை சேவை வழங்கும் ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் கிரேன்க்பர்ட் விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனிக்காக விமான பயணிகள் சேவை மற்றும் தரைச் சேவைகளை வழங்கும் ஒப்பந்தம் 2025-10-31 திகதியுடன் முடிவடைந்துள்ளது.

பொருள் களஞ்சிய முகாமைத்துவ சேவை வழங்கல் ஒப்பந்தம் 2025-12-31 திகதி முடிவடைய உள்ளது. குறித்த விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான கம்பனிக்காக விமானப் பயணிகள் சேவை மற்றும் தரைச் சேவைகள் மற்றும் பண்டங்கள் களஞ்சிய முகாமைத்துவ சேவை வழங்கும்; இயலுமையுள்ள பொருத்தமான சேவை வழங்குநர்களை தெரிவு செய்வதற்காக வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டிப் பெறுகை முறையைப் பின்பற்றி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்காக 06 விலைமனுக்கள் கிடைத்துள்ளன. அதற்கமைய, உயர் மட்ட நிரந்தரப் பெறுகை குழுவின் விதந்துரைக்கமைய மேற்குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 

6.49 மில்லியன் யூரோ மதிப்பீட்டுச் செலவில் 03 ஆண்டு காலத்துக்கு (2025-11-01 தொடக்கம் 2028-10-31 வரை) விமான பயணிகள் சேவை மற்றும் தரை சேவை வழங்கல் ஒப்பந்தந்தத்தை கணிசமான பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள  குறைந்தபட்ச விலைமனுதாரரான Fraport Ground Services Gmbh நிறுவனத்துக்கு வழங்குதல்.

6947,766 மில்லியன் யூரோ மதிப்பீட்டுச் செலவில் 03 ஆண்டு காலத்துக்கு (2025-11-01 தொடக்கம் 2028-10-31 வரை) பொருள் களஞ்சிய முகாமைத்துவ சேவை வழங்கல் ஒப்பந்தந்தத்தை கணிசமான பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள குறைந்தபட்ச விலைமனுதாரரான Fraport Ground Services Gmbh நிறுவனத்துக்கு வழங்குதல்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30
news-image

சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக...

2026-08-09 14:57:24
news-image

சிறை மோதலுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறுவது...

2026-08-09 15:25:39
news-image

ஜே.ஆரின் அரசியலமைப்புக்கு அரசாங்கம் மேலும் வலு...

2026-08-09 14:48:04