உலக கராத்தே சம்மேளனத்தின் (WKF) புதிய சின்னம்

11 Dec, 2025 | 06:39 PM
image

World Karate Federation உலக கராத்தே சம்மேளனம் புதிய சின்னத்தினை (Logo) புதன்கிழமை (10) உத்தியோபூர்வமாக வெளியிட்டுள்ளதாக தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவர் அன்ரோ டினேஷ் தெரிவித்துள்ளார்.

உலக கராத்தே சம்மேளனத்தின் புதிய‌ சின்னம் கராத்தே கலையின் விழுமியங்களான  மரியாதை, மதிப்பீடுகள் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றினை பேணும் வகையில்  (WKF) இன் சின்னத்தினை நவீனமயமாக்கியுள்ளது.

இது கராத்தே விளையாட்டின் பரிணாம வளர்ச்சியையும், ஒழுக்கம், முன்னேற்றம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான அதன் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

 புதுப்பிக்கப்பட்ட இந்த சின்னம் அடையாளம், சர்வதேச விளையாட்டு சம்மேளனங்களின் முன்னணியில் WKF இனை நிலைநிறுத்தும் ஒரு புதிய, சமகால தோற்றத்தைக் கொண்டுவருகிறது.

மேலும் கராத்தே கலையின் பாரம்பரியத்திற்கும் அதன் வளர்ந்து வரும் உலகளாவிய  இடையிலான தொடர்பினையும் வலுப்படுத்துகிறது, 

இந்த  புதிய சின்னம் அடையாளம் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் அதேவேளை அனைத்து WKF நிகழ்வுகளும் 2026 இல் ஆரம்பமாகும் அனைத்து போட்டிகளிலும் புதுப்பிக்கப்பட்ட சின்னத்தினை (Logo) உபயோகித்து வெளிப்படுத்தபடவுள்ளது.

World Karate Federation (WKF) உலக கராத்தே சம்மளனம் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) அங்கீகாரத்தினை‌ பெற்றுள்ளமை குறிப்படத்தக்கது.

இதனை வெளியிட்ட உலக கராத்தே சம்மேளனத்தின் தலைவர் 

(WKF) திரு. அன்டோனியோ எஸ்பினோஸ் கராத்தே கலையின் வலிமை, மதிப்பீடுகள், விழுமியங்கள் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்ளும் பாரம்பரியத்தை இந்த புதிய சின்னம் பிரதிபலிக்கிறது என தெரிவித்தார். 

இந்த சின்னத்தில் காணப்படும் 5 வர்ணங்களும் ஆசிய கராத்தே சம்மேளனம் (AKF) 44 நாடுகள், ஐரோப்பா கராத்தே சம்மேளனம் (EKF) 54 நாடுகள், பன்அமெரிக்க கராத்தே சம்மேளனம் (PKF) 39 நாடுகள், ஓசியானியா கராத்தே சம்மேளனம் (OKF) 13 நாடுகள் மற்றும் ஆபிரிக்க கராத்தே சம்மேளனம் (UFAK) 51நாடுகளுமாக மொத்தம் 201 நாடுகளை  உள்ளடக்கியதுடன் இந்த வர்ணங்களை இணைககும் வெள்ளைநிற கரைக்கோடுகள் கராத்தேயில் அணியப்படும் வெள்ளைநிற உடையை அடையாளப்படுத்தியும், உலகினை ஒன்றிணைக்கும் அடையாளத்தினையும் பிரதிபலிக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இலங்கை...

2026-01-24 13:45:02
news-image

சென் மேரிஸ் கழகத்திற்கு தீர்மானம் மிக்க...

2026-01-24 13:05:56
news-image

டயலொக் தலைமையகத்தில் ஐசிசி ஆடவர் ரி20...

2026-01-23 20:19:55
news-image

19 வயதின் கீழ்  ஆண்க  உலகக்...

2026-01-23 17:19:50
news-image

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்...

2026-01-23 14:58:50
news-image

தீர்மானம் மிக்க நியூ ஸ்டார் -...

2026-01-23 17:21:25
news-image

ஐசிசி 19 வயதின்கீழ் ஆண்கள் உலகக்...

2026-01-23 12:52:20
news-image

ICC T20 உலகக்கிண்ணம் இலங்கையில் மக்கள்...

2026-01-23 16:13:22
news-image

இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2026-01-22 23:03:17
news-image

பராசூட் மூலம் விமானப்படை வீரர்களால் அரங்கிற்கு...

2026-01-22 19:07:02
news-image

தேசிய அலைச் சறுக்கல் பெண்கள் பிரிவில்...

2026-01-22 17:17:49
news-image

இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்...

2026-01-22 14:33:52