யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழக கட்டுமான வேலைகளை நிறைவு செய்ய அமைச்சரவை அனுமதி

11 Dec, 2025 | 05:15 PM
image

யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் கட்டுமான வேலைகளைப் பூர்த்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதந்துரைக்கமையவும் மற்றும் அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் பல கருத்திட்டங்கள் மூலம் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த கட்டிடங்கள் மற்றும் வசதிகள் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆயினும், யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் சில குறிப்பிட்ட காலப்பகுதியில் பூர்த்தி செய்வதற்கு இயலுமை கிட்டவில்லை.

அதற்கமைய, கீழ்க்காணும் கட்டுமானங்களைப் பூர்த்தி செய்வதற்கும், அதற்கான முன்மொழியப்பட்டவாறான மொத்த செலவு மதிப்பீட்டை திருத்தம் செய்வதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

கருத்திட்டத்தின் பெயர் செயற்பட வேண்டிய விதம் 

01.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ அலகுக்கான கட்டிடத்தின் 4 ஆவது மற்றும் 5 ஆவது மாடிகளைப் பூர்த்தி செய்தல் முறையான பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடித்து தேர்ந்தெடுக்கப்படும் ஒப்பந்தக்காரர்கள் மூலம் பூர்த்தி செய்தல்

02.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்ம தொழிநுட்பம் கட்டிடத்தின் II ஆம் கட்டத்தை நிர்மாணித்தல்

03.களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் விரிவுரை மண்டபக் கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் ஆரம்ப ஒப்பந்தக்காரர்கள் மூலமாக நிதி மற்றும் விலை மாற்றத்தை மாத்திரம் வழங்கிப் பூர்த்தி செய்தல்

04.கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 17 மாடிகளுடன் கூடிய உத்தேச கட்டிடத்தொகுதியின் எஞ்சிய வேலைகளைப் பூர்த்தி செய்தல் எஞ்சிய வேலைகளைப் பூர்த்தி செய்வதற்காக தேவையான நிதியொதுக்கீடுகள் 2025 மற்றும் 2026 போன்ற ஆண்டுகளில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செலவு விடயதானத்தின் கீழ் ஒதுக்கப்படுகின்ற நிதியில் முகாமைத்துவப்படுத்தல்

05.இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிலையத்திற்கான உத்தேச கட்டிடத்தை நிர்மாணித்தல் ஆரம்ப ஒப்பந்தக்காரர்கள் மூலமாக நிதி மற்றும் விலை மாற்றத்தை மாத்திரம் வழங்கிப் பூர்த்தி செய்தல்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-14 06:42:08
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13
news-image

'நீதியின் ஓலம் - 2': தமிழினப்படுகொலைக்கு...

2026-08-14 05:57:08
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின்...

2026-08-14 05:54:23
news-image

நாட்டில் விபத்துக்களில் சிகிக்கி 1,693 பேர்...

2026-08-14 04:47:02