மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தின் கட்டம் 2 கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாணத்தின் மஹஎல ஆற்றின் நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்வதற்காக வடமத்திய மாகாணத்தின் மஹஎல ஆற்றுடன் இணைக்கப்பட்ட பிரதேசங்களில் மேம்படுத்தப்பட்ட நீர் விநியோகக் கட்டமைப்புக்களுடன் கூடிய வணிக விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளை உள்ளிட்ட மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டம் கட்டம் 2 இனை அமுல்படுத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக அசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இணை நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்கு 2025.05.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஹுருலு வாவி , மஹகனதராவ வாவி, நாச்சதூவ வாவி, நுவர வாவி மற்றும் திசாவாவி போன்ற பிரதான நீர்ப்பாசன உத்தேசத் திட்டங்களுக்கு இக்கருத்திட்டத்தின் மூலம் ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், 17,500 ஹெக்ரெயார் காணியில் பயிரிடுவதற்கான வசதிகள் வழங்கப்படும்.
அத்துடன், கருத்திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் மூலம் 175,000 குடும்பங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். குறித்த கருத்திட்டத்தின் செயற்பாடுகளுக்கு 536.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பீட்டுச் செலவில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியிடலை ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் பெற்றுக் கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM