(இராஜதுரை ஹஷான்)
காலநிலை குறித்து விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம்.அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
வளிமண்டவியல் திணைக்களம் காலநிலை குறித்து விடுத்த அறிவிப்புக்களை அரசாங்கம் அலட்சியம் செய்துள்ளது. முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம்.
அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுவதால் அரச நிர்வாகத்தின் அடிப்படை விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படுவதில்லை.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கியுள்ளோம். மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தவில்லை. நாட்டு மக்கள் நெருக்கடிக்குள்ளான சந்தர்ப்பத்தில் ராஜபக்ஷர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM